வௌ்ளிக்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

வௌ்ளிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 20-10-2018 | 6:30 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 0. பா. டெனீஸ்வரனுக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை சவாலுக்கு உட்படுத்தி வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணைகளில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாக உயர் நீதிமன்ற நீதியரசர் L. T. B. தெஹிதெனிய அறிவித்துள்ளார். 02. கலால் வரி கட்டளைச் சட்டத்தின் கீழ் இடம்பெறும் குற்றங்களுக்கு பொலிஸாரால் வழக்குத் தாக்கல் செய்ய முடியும் என தங்காலை நீதவான் நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது. 03. வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைகளின் வைத்தியர்கள் நேற்று கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 04. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவையில் தெரிவித்ததாகக் கூறப்படும் கருத்து தொடர்பில் வௌியான அறிக்கையின் உண்மைத்தன்மைக்காக முன்நிற்பதாக ‘த ஹிந்து’ பத்திரிகையின் செய்தியாசிரியர் என். ராம் தெரிவித்துள்ளார். 05. இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர்களை சந்தித்தார். விளையாட்டுச் செய்திகள் 01. இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் – அமிர்தசரஸில் தசரா கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட ரயில் விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. 02. சவுதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கஷோஜி (Jamal Khashoggi) காணாமற்போன சம்பவம் காரணமாக சவுதி மீது கடுமையான தடைகளை விதிக்குமாறு அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.