மாவட்ட சபை முறையை முன்வைத்துள்ள வசந்த சேனாநாயக்க

அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்: மாவட்ட சபை முறையை முன்வைத்துள்ள வசந்த சேனாநாயக்க

by Staff Writer 20-10-2018 | 7:48 PM
Colombo (News 1st) வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க கொழும்பில் இன்று ஊடக சந்திப்பினை ஏற்பாடு செய்திருந்தார். இதன்போது, சிறுபான்மையினரின் கலாசாரம், சமயம் மற்றும் அவர்களின் அடையாளங்களைப் பாதுகாப்பதற்கு இலங்கையில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என வௌிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிவித்தார்.
மாகாண சபைகள் முறையில்லாது, மாவட்ட சபை முறை யோசனையை நான் முன்வைத்துள்ளேன். அதனை நான் சபாநாயகரிடம் சமர்ப்பித்துள்ளேன். அது தற்போது பாராளுமன்றத் தெரிவுக்குழுவிலுள்ளது. எனினும், இதுவரை எனக்கு எதுவித பதிலும் வழங்கப்படவில்லை. தற்போதிருக்கும் முறைமைக்கு ஏற்ப, அதிக உறுப்பினர்களைப் பெறும் மாவட்டம், ஏனைய சிறிய மாவட்டங்களை விழுங்கும் நிலை காணப்படுகின்றது. வட மாகாணத்தில் யாழ்ப்பாணம் தான் பிரதான மாவட்டமாகவுள்ளது
என வசந்த சேனாநாயக்க விளக்கமளித்தார்.  

ஏனைய செய்திகள்