செயற்கை நிலவை உருவாக்கும் சீனா

செயற்கை நிலவை உருவாக்கும் சீனா

செயற்கை நிலவை உருவாக்கும் சீனா

எழுத்தாளர் Bella Dalima

20 Oct, 2018 | 4:34 pm

சீனாவில் தெரு விளக்குகளுக்கு பதிலாக செயற்கை நிலவை 2022 ஆம் ஆண்டிற்குள் அறிமுகப்படுத்த சீனா திட்டமிட்டுள்ளது.

சீனாவில் தெரு விளக்குகளுக்கு பதிலாக செயற்கை நிலவை உருவாக்கும் முயற்சியில் சீன விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

இயற்கை நிலவு சூரியனிலிருந்து சக்தியை பெறுவது போல, இந்த செயற்கை நிலவுகளுக்கு செயற்கைக்கோள்கள் மூலம் சக்தி கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்படுகிறது. இதற்கான முதல் சோதனை வெற்றிகரமாக முடிவடைந்தால், 2022-ஆம் ஆண்டு இந்த செயற்கை நிலவு அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செயற்கை நிலவின் மூலம் மின்வசதி இல்லாத கிராமப் பகுதிகளிலும், பேரிடர் காலங்களில் மீட்பு நடவடிக்கைகளின் போதும் வெளிச்சம் பெற முடியும் என கூறப்படுகிறது. மேலும் இந்த செயற்கை நிலவானது இயற்கையான நிலவை விட 8 மடங்கு ஒளிரும் சக்தி கொண்டதாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்