வெல்லவாய வீதியை பயன்படுத்தும் சாரதிகளுக்கு அறிவுரை

எல்ல - வெல்லவாய வீதியைப் பயன்படுத்தும் சாரதிகளுக்கு அறிவுரை

by Staff Writer 20-10-2018 | 11:45 AM
Colombo (News 1st) எல்ல - வெல்லவாய வீதியின் இராவணா எல்ல பகுதியை அண்மித்து கற்கள் சரிந்து வீழக்கூடிய அபாயமுள்ளதால் அவதானமாக வாகனத்தை செலுத்துமாறு பொலிஸார் சாரதிகளை அறிவுறுத்தியுள்ளனர். இன்று காலை இராவணா எல்ல பகுதியிலுள்ள வீதியில், கற்பாறைகள் சரிந்து வீழ்ந்துள்ளன. கற்களை அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அப்பகுதியூடான போக்குவரத்திற்கு எவ்வித பாதிப்பும் இல்லை என பொலிஸார் குறிப்பிட்டனர். நேற்று இரவு முதல் பெய்துவரும் மழையினால் இராவணா எல்லயின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால், அவதானமாக நீர்வீழ்ச்சியில் குளிக்குமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.