இருவேறு துப்பாக்கிப் பிரயோகங்களில் மூவர் காயம்

இருவேறு துப்பாக்கிப் பிரயோகங்களில் மூவர் காயம்

இருவேறு துப்பாக்கிப் பிரயோகங்களில் மூவர் காயம்

எழுத்தாளர் Staff Writer

20 Oct, 2018 | 5:55 pm

Colombo (News 1st) கொழும்பு – மாளிகாவத்தை பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று பிற்பகல் 4 மணியளவில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த 24 வயதுடைய இளைஞர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்தவர் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் பையா என்பவரின் உதவியாளர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதேவேளை, மாத்தறை, ரொட்டும்ப கிராமிய வங்கிக்கு அருகாமையில் இன்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர்.

தலைக்கவசத்துடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த இருவர் மாவரல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் ஒருவர் மாத்தறை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மாவரல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்