காங்கிரஸ் கட்சித் தலைவர்களை சந்தித்தார் பிரதமர்

இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர்களை சந்தித்தார் பிரதமர் ரணில் விக்ரமசிங்க

by Staff Writer 19-10-2018 | 8:36 PM
Colombo (News 1st) இந்தியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர்களை சந்தித்தார். இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை பிரதமர் ரணில் விக்ரமசிங்க புது டெல்லியில் சந்தித்துக் கலந்துரையாடினர். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் அமைச்சர்களான மலிக் சமரவிக்ரம, சாகல ரத்நாயக்க மற்றும் அர்ஜூன ரணதுங்க உள்ளிட்டோர் இணைந்து கொண்டனர். மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்றிரவு புது டெல்லி விமான நிலையத்தை சென்றடைந்தார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை நாளை சந்திந்துக் கலந்துரையாடவுள்ளார்.