கொழும்பின் சில பகுதிகளில் 17 மணித்தியாலங்கள் நீர்வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் 17 மணித்தியாலங்கள் நீர்வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் 17 மணித்தியாலங்கள் நீர்வெட்டு

எழுத்தாளர் Staff Writer

19 Oct, 2018 | 3:25 pm

Colombo (News 1st) கொழும்பின் சில பகுதிகளில் இன்று நண்பகல் முதல் 17 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

கோட்டை மாநகர சபைக்கு உட்பட்ட கொழும்பு 5, 7, 8 ஆகிய பகுதிகளுக்கு இன்று நண்பகல் 12 மணி முதல் நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அம்பத்தல முதல் ஜூபிலி நீர் தடாகத்திற்கு நீர் வழங்கும் பிரதான குழாயில் மேற்கொள்ளப்படும் திருத்தப்பணிகள் காரணமாக நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம், நாளை காலை 5 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த காலப்பகுதியில் கொழும்பு – 6, பொரலஸ்கமுவ மற்றும் மஹரகம நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படுவதாகவும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது.

இதனால் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்