இந்தியாவில் தசரா கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட ரயில் விபத்தில் 61 பேர் பலி 

இந்தியாவில் தசரா கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட ரயில் விபத்தில் 61 பேர் பலி 

இந்தியாவில் தசரா கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட ரயில் விபத்தில் 61 பேர் பலி 

எழுத்தாளர் Bella Dalima

19 Oct, 2018 | 9:43 pm

இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் – அமிர்தசரஸில் தசரா கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட ரயில் விபத்தில் 61 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் இன்று தசரா திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் தசரா விழா கொண்டாடப்பட்டது.

அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட ரயில் விபத்தில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்வதுடன், மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்