நாலக்க டி சில்வாவிடம் நீண்ட நேரம் விசாரணை

நாலக்க டி சில்வாவிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் நீண்ட நேரம் விசாரணை

by Staff Writer 18-10-2018 | 7:06 PM
Colombo (News 1st) பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுக்கு பொறுப்பாகவிருந்த பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வாவிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் இன்று நீண்ட நேரம் விசாரணை மேற்கொண்டனர். அவர் மீண்டும் நாளை (19) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ ஆகியோரை கொலை செய்வதற்கான சதித்திட்டம் தீட்டியமை தொடர்பில் ஊழலுக்கு எதிரான படையணியின் நடவடிக்கை பணிப்பாளர் நாமல் குமார அம்பலப்படுத்தியதை அடுத்தே பிரதி பொலிஸ் மா அதிபர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டார். கடந்த 16 ஆம் திகதி வாக்குமூலம் பதிவு செய்வதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அவர் அழைக்கப்பட்டாலும் தனிப்பட்ட காரணத்தினால் அவர் அன்றைய தினம் ஆஜராகவில்லை. இரண்டாவது தடவையாகவும் கறுவாத்தோட்ட பொலிஸாரால் விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமையவே இன்றைய தினம் நாலக்க டி சில்வா குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியிருந்தார். அதன்படி, பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுக்கு பொறுப்பாகவிருந்த பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வா இன்று காலை 9.30-க்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியதுடன் இன்று மாலை வரை அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.