பாசிக்குடாவில் பிரான்ஸ் நாட்டு யுவதிகள் கலந்துகொண்ட மரதன் ஓட்டப்போட்டி

பாசிக்குடாவில் பிரான்ஸ் நாட்டு யுவதிகள் கலந்துகொண்ட மரதன் ஓட்டப்போட்டி

பாசிக்குடாவில் பிரான்ஸ் நாட்டு யுவதிகள் கலந்துகொண்ட மரதன் ஓட்டப்போட்டி

எழுத்தாளர் Staff Writer

18 Oct, 2018 | 10:15 pm

Colombo (News 1st) சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மரதன் ஓட்டப் போட்டியொன்று இன்று பாசிக்குடா கடற்கரையில் நடைபெற்றது.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த யுவதிகள் கலந்து கொண்ட இந்த மரதன் ஒட்டம் இன்று காலை கல்குடா கல்மடு விவேகானந்தா வித்தியாலயத்திற்கு முன்பாக ஆரம்பமானது.

அமைச்சர் ஜோன் அமரதுங்க மற்றும் இராஜாங்க அமைச்சர் அலிசாகீர் மௌலானா ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு மரதன் ஓட்டப் போட்டியை ஆரம்பித்து வைத்தனர்.

இந்த மரதன் ஓட்டப் போட்டியில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 267 போட்டியாளர்களும் இலங்கை போட்டியாளர்களும் பங்குபற்றியிருந்தனர்.

கல்குடா கிராம சேவகர் பிரிவிலுள்ள கல்மடுவில் காலை 6.45 மணிக்கு ஆரம்பமான இந்தப் போட்டி விநாயகபுரம், பேத்தாழை, கருங்காலிச்சோலை ஆகிய கிராமங்கள் ஊடாக சென்று மீண்டும் பாசிக்குடா கடற்கரையை சென்றடைந்தது.

இதேவேளை, கடந்த 11ஆம் திகதி மட்டக்களப்பில் ஆரம்பமான Raid Amazons எனும் விளையாட்டு நிகழ்வு பாசிக்குடா கடற்கரையில் இன்று முடிவடைந்தது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்