எரிபொருள் விலைச்சூத்திரத்தை வௌியிட்டார் மங்கள சமரவீர

எரிபொருள் விலைச்சூத்திரத்தை வௌியிட்டார் மங்கள சமரவீர

எரிபொருள் விலைச்சூத்திரத்தை வௌியிட்டார் மங்கள சமரவீர

எழுத்தாளர் Bella Dalima

18 Oct, 2018 | 9:03 pm

Colombo (News 1st)  பிரதமர் உள்ளிட்ட அநேகமானவர்கள் அறியாத எரிபொருள் விலைச்சூத்திரம் தொடர்பில் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர இன்று ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்டார்.

அந்த விலைச்சூத்திரமானது – MRP = V1 + V2+ V3+ V4 என மங்கள சமரவீர குறிப்பிட்டார்.

MRP எனும் Maximum Retail Price நான்கு காரணங்களை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படுவதாக அமைச்சர் மங்கள சமரவீர விளக்கமளித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

V1 என்றால் துறைமுகத்தில் இறக்கும் செலவு எனவும், ஒரு பீப்பாய்க்கு செலவாகும் சிங்கப்பூர் விலையும் ஆவியாதல் மற்றும் ரூபாவின் பெறுமதியும் இதன்போது கவனத்திற்கொள்ளப்படுகிறது.

V2 என்றால் உற்பத்தி செலவு (உள்நாட்டு துறைமுகக் கட்டணம், துறைமுகத்திற்கு கொண்டுவரப்படுகின்றபோது ஏற்படுகின்ற விரையம், சந்தை முகவரின் மானியம், களஞ்சிய செலவு ஆகியனவும் அடங்கும்)

V3 என்றால் நிர்வாக செலவு (ஊழியர் கொடுப்பனவு உள்ளிட்ட நிர்வாக செலவு, ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைகின்றமை உள்ளிட்ட ஏனைய செலவுகளும் உள்ளடங்கும்).

V4 என்றால் வரிச் செலவு (சுங்க வரி, துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி வரி, தேச நிர்மாண வரி ஆகிய வரிகள் அடங்கும்)

மேற்சொன்ன நான்கையும் கணக்கிட்டே MRP-ஐ 10 ஆம் திகதிகளில் அறிமுகம் செய்வதாக அமைச்சர் மங்கள சமரவீர தௌிவூட்டினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்