உழுந்து, நிலக்கடலை இறக்குமதியை நிறுத்துவதற்கு நடவடிக்கை

உழுந்து, நிலக்கடலை இறக்குமதியை நிறுத்துவதற்கு நடவடிக்கை

உழுந்து, நிலக்கடலை இறக்குமதியை நிறுத்துவதற்கு நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

18 Oct, 2018 | 7:09 am

Colombo (News 1st) அடுத்த வருடத்திருந்து உழுந்து மற்றும் நிலக்கடலை இறக்குமதி செய்வதை நிறுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதேநேரம், சோளம் மற்றும் பயறு உள்ளிட்ட பல தானியங்களுக்கான வரி அடுத்த வருடத்திருந்து இரு மடங்காகவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.

உள்நாட்டுப் பயிர்செய்கையாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அடுத்த வருடத்திலிருந்து உழுந்து மற்றும் நிலக்கடலை போன்றவற்றை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்யவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்