பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வாவை பதவி நீக்கத் தீர்மானம்

பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வாவை பதவி நீக்கத் தீர்மானம்

பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வாவை பதவி நீக்கத் தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

17 Oct, 2018 | 12:31 pm

Colombo (News 1st) பொலிஸ் பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு பொறுப்பாகவிருந்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக்க டி சில்வாவை, பதவியிலிருந்து நீக்குவதற்கு சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தீர்மானித்துள்ளார்.

இது தொடர்பிலான பரிந்துரை, அமைச்சின் செயலாளர் பத்மசிறி ஜயமான்னவின் கையெழுத்துடன் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவுக்கு எதிரான கொலை முயற்சி சதித்திட்டம் தொடர்பில் இடம்பெற்றுவரும் விசாரணைகளில், இதுவரையான தகவல்களுக்கு இணங்க, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்