by Bella Dalima 17-10-2018 | 7:52 PM
இந்திய மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் தனது பதவியை இன்று இராஜினாமா செய்துள்ளார்.
தன் மீதான பாலியல் குற்றச்சாட்டை அடுத்து அவர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
தன் மீது சுமத்தப்பட்ட தவறான குற்றச்சாட்டுகளை தனிப்பட்ட வகையில் நீதிமன்றத்தில் சந்திப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பெண்கள் தாங்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தல்களுக்கு ஆளானதை #MeToo ஹேஷ்டேக் மூலம் ட்விட்டர் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில், 40 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகைத்துறையில் பணியாற்றிய அனுபவம் கொண்ட மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் எம்.ஜே. அக்பர் மீது பெண் பத்திரிகையாளர்கள் பலர் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அமைச்சர் அக்பரை கடுமையாக விமர்சித்த நிலையில், அவர் பதவியை விட்டு விலக வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.