UPDATE: YOUTUBE சேவை வழமைக்குத் திரும்பியது

UPDATE: YOUTUBE சேவை வழமைக்குத் திரும்பியது

by Chandrasekaram Chandravadani 17-10-2018 | 8:16 AM
உலகின் முதல்நிலை இணையத்தளமான யூடியூப்பின் சேவை மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளது. யூடியூப் (YOUTUBE) இன் சேவை நேற்று இரவு முதல் தடைப்பட்டிருந்தது. இதனால், யூடியூப் வீடியோக்களைப் பார்வையிடமுடியாத நிலை ஏற்பட்டிருந்தது. இந்தநிலையில், குறித்த பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முயற்சி செய்வதாகத் தெரிவித்துள்ள யூடியூப் செவை, இந்த விடயம் தொடர்பில் முறைப்பாடு செய்தமைக்காக நன்றியும் தெரிவித்திருந்தது. அதேநேரம், குறித்த கோளாறு சரிசெய்யப்பட்டதன் பின்னர், அறியத்தருவதாகவும்  இதனால் ஏற்பட்ட அசளகரியத்திற்கு வருந்துவதாகவும் யூடியூப் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.