செவ்வாய்க்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 17-10-2018 | 5:45 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. எரிபொருள் விலை உயர்வுடன், மின்சக்தித் துறைக்கு ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து ஆய்வு செய்வதற்கு, அடுத்த வாரத்திற்குள் விசேட குழுவொன்றை அமைக்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க அமைச்சு தெரிவித்துள்ளது. 02. புதிய பயங்கரவாதத் தடைச் சட்டமூலம் அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிரானது என பொருட்கோடல் வழங்குமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உயர் நீதிமன்றத்தில் நேற்று (16) விசேட மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். 03. நீதிமன்றத்தை அவமதித்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் முன்வைத்துள்ள அடிப்படை ஆட்சேபனை மனு தொடர்பிலான தீர்ப்பை எதிர்வரும் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி அறிவிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (16) தீர்மானித்துள்ளது. 04. யானைகளிற்கான உரிமம் தொடர்பிலான வழக்கு விசாரணைகளுக்காக, அலி ரொஷான் என அழைப்படும் நிராஜ் ரொஷான் உள்ளிட்ட 7 பிரதிவாதிகளையும் விசேட மேல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 05. பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் இந்தியாவிற்கான விஜயத்தில் ஈடுபடவுள்ளார். 06. நாட்டின் அரச நிறுவனங்களிலும் நிதி மோசடி இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளதாக கணக்காய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. வௌிநாட்டுச் செய்திகள் 01. உலகின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் போல் அலன் (65 வயது) புற்றுநோயால் நேற்று (16) உயிரிழந்தார். 02. வெப்பநிலை அதிகரிப்பு குறித்து பருவநிலை மாற்றம் தொடர்பான பன்னாட்டு அரசுகளின் குழு அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், தமக்கு உடன்பாடு இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். விளையாட்டுச் செய்திகள் 01. இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரரான குசல் ஜனித் பெரேரா விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 02. பங்களாதேஷ் இளையோர் அணியுடனான கிரிக்கெட் தொடரை வெற்றியுடன் நிறைவுசெய்வதற்கு எதிர்ப்பார்ப்பதாக இலங்கை இளையோர் அணியின் தலைவரான நிபுன் தனஞ்சய தெரிவித்துள்ளார்.