எத்தியோப்பிய அமைச்சரவையில் சமபகுதி பெண்களுக்கு

அமைச்சரவையில் சம பகுதியை பெண்களுக்கு வழங்கிய எத்தியோப்பிய பிரதமர்

by Chandrasekaram Chandravadani 17-10-2018 | 10:52 AM
எத்தியோப்பிய பிரதமர் அபி அஹமட் (Abiy Ahmed), தமது அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சர் உட்பட பாதியளவு அமைச்சர் பதவிகளுக்கு பெண்களை நியமித்துள்ளார். ஆண்களைவிட பெண்கள் குறைவாக ஊழலில் ஈடுபடுவதால், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீண்டும் நிலைநிறுத்துவதற்கு உதவியாக இருக்கும் என, நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது தனது இந்த முடிவிற்கு விளக்கமளித்துள்ளார். அதேநேரம், அமைச்சர் பதவிகளை 28 இலிருந்து 20 ஆகக் குறைத்துமுள்ளார். எத்தியோப்பிய பிரதமராகப் பதவியேற்ற கடந்த ஏப்ரல் மாதம் முதல் அபி பல சீர்திருத்தங்களை முன்னெடுத்து வருகிறார். அத்தோடு, எரித்திரியாவுடன் கடந்த 2 தசாப்த காலமாக நிலவிவந்த முரண்பாட்டை முடிவுக்குக் கொண்டுவந்ததோடு, ஆயிரக்கணக்கான அரசியல் கைதிகளை விடுதலை செய்துள்ளார்.