அஜித் படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்கும் நஸ்ரியா

அஜித் படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்கும் நஸ்ரியா

அஜித் படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்கும் நஸ்ரியா

எழுத்தாளர் Bella Dalima

17 Oct, 2018 | 4:48 pm

அஜித் நடிப்பில் உருவாகி வரும் விஸ்வாசம் படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக இருக்கும் நிலையில், அஜித்தின் அடுத்த படத்தின் மூலம் நஸ்ரியா தமிழ் சினிமாவில் மீண்டும் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

நேரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நஸ்ரியா நாசிம். தொடர்ந்து ராஜா ராணி, நையாண்டி, வாயை மூடி பேசவும் உள்ளிட்ட படங்களில் நடித்தார். கடைசியாக ஜெய் ஜோடியாக திருமணம் எனும் நிக்காஹ் படத்தில் நடித்திருந்தார்.

பின்னர் மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்ட நஸ்ரியா, சினிமாவில் இருந்து விலகினார். சமீபத்தில் மீண்டும் படத் தயாரிப்பின் மூலம் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுத்த நஸ்ரியா, கடைசியாக பிரித்விராஜ் ஜோடியாக கூடே என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது இரு படங்களைத் தயாரித்து வருகிறார்.

திருமணத்திற்கு பிறகு, அவருக்கு ஏற்ற கதை அமைந்தால் நஸ்ரியா நடிப்பார் என்று பகத் பாசில் கூறியிருப்பதால், சரியான கதைக்காக நஸ்ரியா காத்திருப்பதாகத் தகவல் வெளியானது.

இந்த நிலையில், கடந்த வாரம் நஸ்ரியா தனது ட்விட்டர் பக்கத்தில், தான் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வரப் போவதாகவும், முக்கிய அறிவிப்பு ஒன்று விரைவில் வரும் என்றும் கூறியிருந்தார். நடிகை நஸ்ரியா தான் அஜித்தின் தீவிர ரசிகை என்றும், அவருடன் நடிக்க கிடைக்கும் வாய்ப்புக்காக காத்திருப்பதாகவும் பலமுறை கூறியிருக்கிறார். இந்த நிலையில், உங்களின் அடுத்த படம் உங்களுக்கு பிடித்த நடிகருடனா என்று கேட்டதற்கு, இருக்கலாம் என்று ஸ்மைலியுடன் கூறியிருக்கிறார்.

அஜித் நடித்து வரும் விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கும் நிலையில், அஜித் அடுத்ததாக எச்.வினோத் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்திற்கான முதற்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. அஜித் படத்தில் நஸ்ரியா நடிக்கும் பட்சத்தில், அது அவருக்கு ஒரு சரியான ரீ-என்ட்ரியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்