பொகவந்தலாவையில் மாற்றுவீதி அமைப்பதில் RDA கவனம்

ஹற்றன் - பொகவந்தலாவையில் மாற்றுவீதி அமைப்பதில் வீதி அபிவிருத்தி அதிகாரசபை கவனம்

by Staff Writer 16-10-2018 | 1:32 PM
Colombo (News 1st) மண்சரிவு ஏற்பட்ட ஹற்றன் - பொகவந்தலாவை பிரதான வீதிக்கு அருகில் மாற்று வீதியொன்றை அமைப்பது தொடர்பில் வீதி அபிவிருத்தி அதிகாரசபை கவனம் செலுத்தியுள்ளது. இதற்காக, தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் ஒத்துழைப்பைக் கோரியுள்ளதாக சபையின் பிரதம பொறியியலாளர் தெரிவித்துள்ளார். மண்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு அருகில் பிறிதொரு வீதியை அமைப்பது தொடர்பில் தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் பரிந்துரைகள் அவசியம் எனவும் அவர் கூறியுள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். ஹட்டன் - பொகவந்தலாவை வீதியின் நோர்வூட் நியூவெலிகம பகுதி கடந்த சனிக்கிழமை தாழிறங்கியது. இதனால், நேற்று முன்தினம் முதல் ஹட்டன் - பொகவந்தலாவை பிரதான வீதி மூடப்பட்டுள்ளது. இதனால் வாகனப் போக்குவரத்தும் முற்றாகத் தடைப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார். ஹட்டன் - பொகவந்தலாவை பிரதான வீதியின் நோர்வூட் நியூவெலி பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் 4 வீடுகள் சரிந்து காசல்ரீ நீர்த்தேக்கத்துக்குள் வீழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.