எமில் ரஞ்சனின் விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் சிறைச்சாலை ஆணையாளர் எமில் ரஞ்சனின் விளக்கமறியல் நீடிப்பு

by Staff Writer 16-10-2018 | 1:03 PM
Colombo (News 1st) வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் சிறைச்சாலை ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவாவின் விளக்கமறியலில் நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் இன்று (16) சந்தேகநபர் ஆஜர்ப்படுத்தப்பட்டபோதே, இந்த விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 30 ஆம் திகதி வரை அவரது விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.