நியூ வெலிகம பகுதியில் தொடர்ந்தும் மண் சரிவு; வீதி தாழிறங்கியுள்ளதால் போக்குவரத்தில் சிரமம்

நியூ வெலிகம பகுதியில் தொடர்ந்தும் மண் சரிவு; வீதி தாழிறங்கியுள்ளதால் போக்குவரத்தில் சிரமம்

நியூ வெலிகம பகுதியில் தொடர்ந்தும் மண் சரிவு; வீதி தாழிறங்கியுள்ளதால் போக்குவரத்தில் சிரமம்

எழுத்தாளர் Staff Writer

16 Oct, 2018 | 8:32 pm

Colombo (News 1st) பொகவந்தலாவை – பலாங்கொடை, மஸ்கெலிய பிரதான வீதியில் நியூ வெலிகம பகுதியில் தொடர்ந்தும் மண்சரிவு ஏற்படும் அபாயம் நிலவுதாக தேசிய கட்டட நிறுவகம் தெரிவித்துள்ளது.

நியூ வெலிகம பகுதியில் காசல் ரீ நீர்த்தேக்கத்திற்கு அருகில் எஞ்சியிருந்த மற்றைய கட்டடமும் நேற்று (15) மாலை சரிந்து வீழ்ந்தது.

பிரதேசத்தில் 5 குடும்பங்களைச் சேரந்த 23 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அம்பகமுவ பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

மண் சரிவு ஏற்பட்ட பகுதிக்கு 20 மீட்டர் தொலைவில் மலைப்பாங்கான பிரதேசத்தில் வெடிப்புகளைக் காண முடிவதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் அதிகாரிகள் இன்று குறித்த பகுதிக்கு சென்று ஆய்வுகளை மேற்கொண்டனர்.

ஹட்டன் – நோர்வூட் பிரதான வீதியின் 45 மீட்டர் வீதி தாழிறங்கியுள்ளது.

இதனால் பிரதேச மக்கள் போக்குவரத்து செய்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்