நாட்டின் அரச நிறுவனங்களில் நிதி மோசடி இடம்பெற்றுள்ளமை கண்டுபிடிப்பு

நாட்டின் அரச நிறுவனங்களில் நிதி மோசடி இடம்பெற்றுள்ளமை கண்டுபிடிப்பு

நாட்டின் அரச நிறுவனங்களில் நிதி மோசடி இடம்பெற்றுள்ளமை கண்டுபிடிப்பு

எழுத்தாளர் Staff Writer

16 Oct, 2018 | 6:55 am

Colombo (News 1st) நாட்டின் அரச நிறுவனங்களிலும் நிதி மோசடி இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளதாக கணக்காய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2017 ஆம் ஆண்டிற்கான மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வு நடவடிக்கைகளின்போது இந்த விடயம் தெரியவந்துள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

முழுமைப்படுத்தப்பட்ட குறித்த கணக்காய்வு அறிக்கை பாராளுமன்றத்தில்  சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், இடம்பெற்றுள்ள மோசடிகள் தொடர்பில் முழுமையான அறிக்கை விரைவில் தயாரிக்கப்படவுள்ளதாக காமினி விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

1,500 அரச நிறுவனங்களவில் இந்தக் கணக்காய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், அவற்றில் நிதி மோசடி ஒழுக்கமீறல்கள் மற்றும் நிதி நிபந்தனைகளை மீறல் தொடர்பில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் தெரியவந்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்