கற்பிட்டி மாணவர்களுக்கு ஔியூட்டிய மக்கள் சக்தி

மக்கள் சக்தி : கற்பிட்டி சிந்தாத்திரை மாதா ஆரம்ப பாடசாலையில் அமைக்கப்பட்ட கட்டிடம் இன்று மாணவர்களின் பாவனைக்கு

by Staff Writer 15-10-2018 | 7:07 PM

மக்கள் சக்தி வேலைத்திட்டத்தின் கீழ் கற்பிட்டி சிந்தாத்திரை மாதா ஆரம்பப் பாடசாலையில் அமைக்கப்பட்ட கட்டடம் இன்று (15) மாணவர்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

கற்பிட்டி சிந்தாத்திரை மாதா மாணவர்கள் எவ்வித அடிப்படை வசதியுமற்ற இந்தப் பாடசாலையில் ஓலைக் குடில்களிலேயே தமது கல்வியைத் தொடர்ந்தனர். மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் செயற்றிட்டத்தின்போது, நாங்கள் குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்டபோது மழையின் போது நனையாத பாடசாலையில் தாம் கல்வி கற்க வேண்டும் என்பதே இந்தப்பகுதி பெற்றோர் மற்றும் மாணவர்களின் அவாவாக இருந்தது. லங்கென் மன்றம் மற்றும் மக்கள் சக்தி ஆயிரம் செயற்றிட்டத்துடன் இணைந்து இந்த பாடசாலை கட்டடத்தை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கையை கடந்த ஜனவரி 22 ஆம் திகதி முன்னெடுத்தன. குறித்த திட்டத்திற்கான நிதியின் ஒரு பாகம் மியாசிதொட இசை நிகழ்ச்சி மூலம் சேகரிக்கப்பட்டது. ​இந்தப் பாடசாலை மாணவர்களின் எதிர்பார்ப்பை லங்கன் மன்றம் மற்றும் மக்கள் சக்தி ஆயிரம் செயற்றிட்டம் ஒன்றிணைந்து 9 மாதங்களுக்குள் நிறைவேற்றிக் கொடுத்துள்ளன. 6 வகுப்பறைகள் மற்றும் வித்தியாலயத்திற்கான பிரதான அலுவலகமும் மாணவர்களுக்கான விளையாட்டு மைதானமும் இந்தத் திட்டத்தினூடாக பூரணப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிகழ்வில் கற்பிட்டி வலய கல்விப் பணிப்பாளர் தீப்தி பெர்ணேன்டோ உள்ளிட்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.