பெரும்போகத்திற்கான உரம் விநியோகம்

பெரும்போகத்திற்கான உரம் களஞ்சியசாலைகளிற்கு விநியோகம்

by Staff Writer 14-10-2018 | 10:46 AM
Colombo (News 1st) பெரும்போகத்திற்குத் தேவையான உரம் நாடு முழுவதுமுள்ள களஞ்சியசாலைகளிற்கு விநியோகிகப்பட்டுள்ளதாக தேசிய உர செயலகம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், நெல்லிற்கான ஒரு மூடை உரம் 500 ரூபாவிற்கு விநியோகிப்பதாகக் கூறிய செயலகத்தின் பணிப்பாளர் அஜித் புஷ்பகுமார, மேலதிக போகத்திற்கான ஒரு மூடை உரம் 1,500 ரூபாவிற்கு விநியோகிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, இந்தத் தடவை 8 இலட்சம் ஹெக்டேயர் காணியில், பெரும்போக செய்கை முன்னெடுக்கப்படவுள்ளது. 45,000 மெட்ரிக் தொன் யூரியா, 75,000 மெட்ரிக் தொன் எம் ஓ பி வகை உரம் மற்றும் 65,000 மெட்ரிக் தொன் டி எஸ் பி வகை உரம் ஆகிய இம்முறை பெரும்போகத்திற்கு தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, சர்வதேச சந்தையில் உரத்தின் விலை அதிகரித்துள்ளபோதிலும், உர மானியத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.