சனிக்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 14-10-2018 | 6:03 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. எமது வலயத்தின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கை உயர் மட்டத்தில் உள்ளது. வறுமைச் சுட்டெண் 4.1 வீதம் வரை குறைவடைந்துள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். 02. திருகோணமலை எண்ணெய்க் குதங்களை இந்தியாவிற்கு குத்தகைக்கு வழங்குவது தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தை உடனடியாக இரத்து செய்யுமாறு ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பின் ஏற்பாட்டாளர் வசந்த சமரசிங்க வலியுறுத்தினார். 03. சுற்றாடலில் காணப்படும் சவால்களை எதிர்கொள்ள, பாடசாலை மாணவர்களிலிருந்து அனைத்துத் தரப்பினரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தினார். 04. நாட்டிற்குத் தேவையான மருந்து வகைகளின் 90 வீதமானவற்றை, எதிர்வரும் 2 வருடங்களிற்குள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தேசிய ஔடதங்கள் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. 05. புத்தளம் – அருவக்காடு பகுதியில் குப்பைகளைக் கொட்டுவதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். 06. தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு செய்யப்பட்டுள்ளது. வௌிநாட்டுச் செய்திகள் 01. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பினராக இந்தியா தெரிவுசெய்யப்பட்டுள்ளது. 02. நேபாளத்தின் மேற்குப் பகுதியிலுள்ள இமயமலைப் பகுதியில் பெய்த கடுமையான பனிமழை காரணமாக அமைக்கப்பட்டிருந்த முகாம் அழிந்ததில் அதிலிருந்த மலையேறிகள் 9 பேர் பலியாகியுள்ளனர். விளையாட்டுச் செய்தி 01. இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், டக்வர்த் லூயிஸ் விதிமுறையில் இங்கிலாந்து அணி 31 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.