சீனியை அதிக விலையில் விற்பவர்கள் மீது நடவடிக்கை

சீனியை கட்டுப்பாட்டு விலைக்கு அதிக விலையில் விற்பனை செய்வோர் சுற்றிவளைப்பு

by Staff Writer 13-10-2018 | 1:02 PM
Colombo (News 1st) சீனியை கட்டுப்பாட்டு விலைக்கும் அதிக விலையில் விற்பனை செய்யும் வர்த்தகர்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும்வகையில் சீனியின் விலை அதிகரிக்கப்பட்டது. அதற்கமைய, வௌ்ளை சீனி ஒரு கிலோகிராமிற்கான விலை 100 ரூபாவாகவும் பொதியிடப்பட்ட வௌ்ளை சீனி ஒரு கிலோகிராம் 105 ரூபாவாகவும் அதிகபட்ச சில்லறை விலையாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இறக்குமதியாளர்கள் வௌ்ளை சீனியை 100 ரூபாவிற்கும் அதிகமாக விற்பனை செய்வது தடைசெய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை நேற்று அறிக்கை வௌியிட்டிருந்தது. சீனியை அதிக விலைக்கு விற்பனை செய்பவர்கள் தொடர்பில் தமக்கு அறியத்தருமாறு அதிகாரசபையின் தலைவர் அனுர மத்தேகொட தெரிவித்துள்ளார்.