ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உறுப்பினராக இந்தியா

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உறுப்பினராக இந்தியா தெரிவு

by Staff Writer 13-10-2018 | 6:31 AM
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பினராக இந்தியா தெரிவுசெய்யப்பட்டுள்ளது. இதற்காக, நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில் 188 வாக்குகளைப் பெற்று தெரிவாகிய இந்தியா, அடுத்த வருடம் ஜனவரி மாதத்திலிருந்து எதிர்வரும் 3 வருடங்களிற்கு, பேரவையின் உறுப்பினராக செயற்படவுள்ளது. அத்தோடு, ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் 5 உறுப்பினர்கள் உள்ளிட்ட 18 உறுப்பு நாடுகள் இதன்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. பக்ரைன், பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ் மற்றும் பிஜி ஆகிய நாடுகள் ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உறுப்புரிமையைப் பெற்றுள்ளன.