வௌ்ளிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

வௌ்ளிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

வௌ்ளிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

13 Oct, 2018 | 6:08 am

Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள்

01. இலங்கையின் 46 ஆவது பிரதம நீதியரசராக நீதிபதி நலின் பெரேரா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

02. அரச நிதியை முறையற்ற வகையில் பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸவிற்கு எதிரான வழக்கு விசாரணை அடுத்த மாதம் 14 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

03. சட்டக்கல்வி அனுமதிக்கான கல்வித் தகைமையை அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

04. 30 வருடங்களின் பின்னர் பிரதம நீதியரசர் ஒருவரை சேவைக்கால மூப்பின் அடிப்படையில் நியமிக்க, தாம் பரிந்துரைத்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

05. யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் மனித எலும்புக்கூடுகள் சில ​நேற்று (11) கண்டுபிடிக்கப்பட்டன.

வௌிநாட்டுச் செய்திகள்

01. அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் கடந்த புதன்கிழமை (10) கரையைக் கடந்த மைக்கல் சூறாவளி, கற்பனை செய்துபார்க்க முடியாத அளவு அழிவை ஏற்படுத்தியுள்ளதாக அம்மாநில ஆளுநர் ரிக்ஸ்காட் தெரிவித்துள்ளார்.

02. உகண்டாவில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 31 பேர் உயிரிழந்துள்ளனர்.

விளையாட்டுச் செய்தி

01. 44 ஆவது தேசிய விளையாட்டு விழாவில் ஆடவருக்கான 10,000 மீற்றர் ஓட்டத்தில் மத்திய மாகாணத்தின் குமார் சண்முகேஸ்வரன் தங்கப்பதக்கத்தையும் மகளிருக்கான கோலூன்றிப் பாய்தலில் வட மாகாணத்தின் ஹெரீனா ஜெயக்குமார் வெள்ளிப்பதக்கத்தையும் சுவீகரித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்