வென்னப்புவயில் தந்தை தாக்கியதில் மகன் பலி

வென்னப்புவயில் தந்தை தாக்கியதில் மகன் பலி

by Staff Writer 13-10-2018 | 7:19 AM
Colombo (News 1st) வென்னப்புவ - உல்கிட்டியாவ பகுதியில் தந்தை, மகனிற்கு இடையில் ஏற்பட்ட தகராறில், மகன் கொலை செய்யப்பட்டுள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுப்பெற்றதையடுத்து, தந்தை கூரிய ஆயுதத்தால் மகனைத் தாக்கியுள்ளார். இந்தச் சம்பவம் நேற்றிரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த 30 வயதான இளைஞன், நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று பிரேத பரிசோதனை இடம்பெறவுள்ளது. கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேநபர் தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர். இந்தநிலையில், சந்தேகநபரைக் கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.