நிறமூட்டிய அரிசி குறித்து முறைப்பாடு

நிறமூட்டிய அரிசி குறித்து முறைப்பாடு

நிறமூட்டிய அரிசி குறித்து முறைப்பாடு

எழுத்தாளர் Staff Writer

13 Oct, 2018 | 2:07 pm

Colombo (News 1st) நிறமூட்டிய அரிசி விற்பனை தொடர்பில் தெரியவந்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டரிசிக்குப் பதிலாக நிறமூட்டிய அரிசி விற்பனை செய்யப்படுவதாக சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய குறிப்பிட்டுள்ளார்.

பசறை, அநுராதபுரம், குருநாகல் உள்ளிட்ட பகுதிகளில் இந்த அரிசி விற்பனை செய்யப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

சிவப்பு நிறத்தில் அரசி காணப்படுமாயின் அல்லது விரலில் வர்ணங்கள் ஒட்டும் பட்சத்தில் அது குறித்து அறியத்தருமாறும் பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்