கூட்டு ஒப்பந்தம்: இரு தரப்பினரும் இணங்காவிடின் பழைய முறைக்கு அமைய செயற்பட வேண்டும் -நவீன் திசாநாயக்க

கூட்டு ஒப்பந்தம்: இரு தரப்பினரும் இணங்காவிடின் பழைய முறைக்கு அமைய செயற்பட வேண்டும் -நவீன் திசாநாயக்க

கூட்டு ஒப்பந்தம்: இரு தரப்பினரும் இணங்காவிடின் பழைய முறைக்கு அமைய செயற்பட வேண்டும் -நவீன் திசாநாயக்க

எழுத்தாளர் Bella Dalima

13 Oct, 2018 | 8:36 pm

Colombo (News 1st) பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தும் மக்கள் மாநாடு ஹட்டனில் இன்று நடைபெற்றது.

பெருந்தோட்ட உழைப்புரிமை ஒன்றியம் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1300 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என இதன்போது வலியுறுத்தப்பட்டது.

இதன்போது பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க பின்வருமாறு தெரிவித்தார்,

இரு தரப்பினருக்கும் இணக்கப்பாடொன்றுக்கு வர முடியாது போனால், பழைய நிலைமைக்கு அமையவே செயற்பாடுகளை முன்னெடுக்கும் நிபந்தனையொன்றுள்ளது. கடந்த உடன்படிக்கையிலேயே இந்த நிபந்தனையுள்ளது. தொடர்ந்து கலந்துரையாடல்களை மேற்கொண்டு இணக்கப்பாட்டிற்கு வருவார்கள் என நான் எண்ணுகின்றேன். நாளாந்த சம்பளமாக 1000 ரூபாவை தோட்ட சங்கங்கள் கோரியுள்ளன. அதனை வழங்குவது கடினமாகும். தோட்ட நிறுவனங்கள் 900 ரூபாவைக் கோரியுள்ளன. எனினும் 930, 925,940 ரூபாவேனும் வழங்குமாறு நாம் கோரியுள்ளோம். அந்த கட்டணத்திற்கு வர முடியும் என்றால் பேச்சுவார்த்தை விரைவில் நிறைவுபெறும்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்