ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உறுப்பினராக இந்தியா தெரிவு

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உறுப்பினராக இந்தியா தெரிவு

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உறுப்பினராக இந்தியா தெரிவு

எழுத்தாளர் Staff Writer

13 Oct, 2018 | 6:31 am

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பினராக இந்தியா தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

இதற்காக, நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில் 188 வாக்குகளைப் பெற்று தெரிவாகிய இந்தியா, அடுத்த வருடம் ஜனவரி மாதத்திலிருந்து எதிர்வரும் 3 வருடங்களிற்கு, பேரவையின் உறுப்பினராக செயற்படவுள்ளது.

அத்தோடு, ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் 5 உறுப்பினர்கள் உள்ளிட்ட 18 உறுப்பு நாடுகள் இதன்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

பக்ரைன், பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ் மற்றும் பிஜி ஆகிய நாடுகள் ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உறுப்புரிமையைப் பெற்றுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்