குப்பைகளைக் கொட்டுவதற்கு இடமளிக்கப்போவதில்லை

அருவக்காட்டில் குப்பைகளைக் கொட்டுவதற்கு இடமளிக்கப்போவதில்லை - பாலித்த ரங்கே பண்டார

by Staff Writer 13-10-2018 | 7:14 AM
Colombo (News 1st) புத்தளம் - அருவக்காடு பகுதியில் குப்பைகளைக் கொட்டுவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். அதேநேரம், கழிவகற்றல் திட்டத்திற்கு மக்கள் எதிர்ப்பு வௌியிடுகின்றமை நியாயமான விடயம் எனவும் கூறிய அவர், இந்த விடயம் குறித்து தாம் ஏற்கனவே எடுத்துரைத்ததாக சுட்டிக்காட்டியுள்ளார். கழிவகற்றல் பகுதிக்கு அருகில் கடல் அமைந்துள்ளதுடன், மக்களின் குடியிருப்பு மற்றும் கலாஓயா என்பன அமைந்துள்ளன. இவ்வாறான நிலையிலேயே அப்பகுதியில் கழிவுகளைக் கொட்டுவதற்குத் திட்டமிடப்படுவதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் கூறியுள்ளார். கொழும்பிலிருந்து குப்பைகளைக் கொண்டுசென்று புத்தளத்தில் கொட்டுவதற்கு, அந்தப் பகுதி குப்பைத் தொட்டி அல்லவெனவும் பாலித்த ரங்கே பண்டார இதன்போது குறிப்பிட்டுள்ளார். அருவக்காடு கழிவகற்றல் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அங்கு தொடர்ந்தும் ஆர்ப்பாட்டஙகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தகக்கது.