ஹம்பாந்தோட்டை விபத்தில் ஒருவர் பலி; 80 பேர் காயம்

ஹம்பாந்தோட்டை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு; 80 பேர் காயம்

by Staff Writer 12-10-2018 | 8:46 PM
Colombo (News 1st) ஹம்பாந்தோட்டை - லுனுகம்வெஹர புதிய பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 80 பேர் காயமடைந்துள்ளனர். இன்று நண்பகல் 12 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது. வெல்லவாய பிரதான வீதியில், மாத்தறையிலிருந்து அம்பாறை நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்றும் தெஹியத்த கண்டியிலிருந்து மாத்தறை நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் ஹம்பாந்தோட்டை - லுனுகம்வெஹர மற்றும் தெவரவெவ வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் இரண்டு பஸ்களிலும் பயணித்த 80 பேர் வரையில் காயமடைந்துள்ளதுடன், இவர்களில் ஐவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.