உலக சந்தையில் யூரியாவின் விலை அதிகரிப்பு

உலக சந்தையில் யூரியாவின் விலை அதிகரிப்பு

by Staff Writer 12-10-2018 | 7:03 PM
Colombo (News 1st) உலக சந்தையில் ஒரு மெட்ரிக் தொன் யூரியாவின் விலை தற்பொழுது 370 அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது. இருப்பினும், உர நிவாரணத்தின் கீழ் உரத்தை விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு தேசிய உர செயலகத்திற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக துறைசார் அமைச்சு தெரிவித்துள்ளது. உலக சந்தையில் யூரியாவின் விலை அதிகரித்த போதிலும், இலங்கையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் உர நிவாரணத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்துமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, நெல் உற்பத்திக்காக விவசாயிகளுக்கு வழங்கப்படும் யூரியா பொதி ஒன்றின் விலை 500 ரூபாவுக்கும் ஏனைய உற்பத்தி பயிர்களுக்கான யூரியா பொதி ஒன்று 1500 ரூபாவுக்கும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.