அச்சுவேலியில் மின்சார சபை ஊழியர்களால் நிலம் அகழப்பட்ட போது எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

அச்சுவேலியில் மின்சார சபை ஊழியர்களால் நிலம் அகழப்பட்ட போது எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

அச்சுவேலியில் மின்சார சபை ஊழியர்களால் நிலம் அகழப்பட்ட போது எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

எழுத்தாளர் Staff Writer

12 Oct, 2018 | 7:49 pm

Colombo (News 1st) யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் மனித எலும்புக்கூடுகள் சில ​நேற்று (11) கண்டுபிடிக்கப்பட்டன.

அச்சுவேலி – பத்தமேனி பகுதியிலுள்ள சூசையப்பர் வீதியில் நேற்று பிற்பகல் மின்சார சபை ஊழியர்களினால் மின் கம்பம் நாட்டுவதற்கு நிலத்தினை அகழ்ந்தபோது எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளை மல்லாகம் நீதவான் ஏ.அலெக்ஸ்ராஜா இன்று பார்வையிட்டார்.

யாழ். போதனா வைத்தியசாலையின் சட்டவைத்திய நிபுணர் உ.மயூரதன் எலும்புக்கூடுகள் தொடர்பில் ஆய்வினை மேற்கொண்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்