வெள்ளை சீனிக்கான அதிகபட்ச சில்லரை விலை அறிவிப்பு

வெள்ளை சீனிக்கான அதிகபட்ச சில்லரை விலை அறிவிப்பு

வெள்ளை சீனிக்கான அதிகபட்ச சில்லரை விலை அறிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

12 Oct, 2018 | 6:20 pm

Colombo (News 1st) இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், வெள்ளை சீனிக்கான அதிகபட்ச சில்லரை விலையை நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.

அதற்கமைய, ஒரு கிலோகிராம் வௌ்ளை சீனியின் விலை 100 ரூபாவாகவும் பொதியிடப்பட்ட வௌ்ளை சீனி ஒரு கிலோகிராம் 105 ரூபாவாகவும் அதிகபட்ச சில்லறை விலையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சீனி இறக்குமதியாளர்கள் அதிகபட்சம் ஒரு கிலோகிராம் சீனியை 92 ரூபாவிற்கு மேல் விற்பனை செய்ய முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான வர்த்மானி வௌியிடப்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதிகபட்ச சில்லரை விலைக்கு மேலதிகமான விலையில் சீனியை விற்பனை செய்யும் விற்பனையாளர்கள், விநியோகஸ்தர்கள், இறக்குமதியாளர்கள் ஆகியோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனியின் விலை அதிகரிப்பு தொடர்பில் வாழ்க்கைச் செலவு தொடர்பான உபகுழுவின் பரிந்துரைக்கு அமைய, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்