பாரத லக்ஷ்மன் கொலை தொடர்பில் ஹிருணிக்கா மீண்டும் சர்ச்சைக்குரிய வௌிக்கொணர்வு

பாரத லக்ஷ்மன் கொலை தொடர்பில் ஹிருணிக்கா மீண்டும் சர்ச்சைக்குரிய வௌிக்கொணர்வு

பாரத லக்ஷ்மன் கொலை தொடர்பில் ஹிருணிக்கா மீண்டும் சர்ச்சைக்குரிய வௌிக்கொணர்வு

எழுத்தாளர் Staff Writer

12 Oct, 2018 | 8:32 pm

Colombo (News 1st) பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் 7 ஆவது நினைவு தின நிகழ்வு இன்று நடைபெற்றது.

கொலன்னாவையிலுள்ள பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் நினைவிடத்திற்கு முன்பாக நடைபெற்ற இந்த நிகழ்வில், அவரின் குடும்ப உறுப்பினர்களுடன் சதுரிகா சிறிசேனவும் கலந்துகொண்டிருந்தார்.

இந்த நிகழ்வின் போது பாரத லக்ஷ்மனின் மகள் ஹிருணிக்கா பிரேமச்சந்திர பின்வருமாறு தெரிவித்தார்,

பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர அனைத்து இடங்களிலும் அரசாங்கத்தைக் குறைகூறுவார் என மேர்வின் சில்வா குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அன்று வாக்குமூலம் வழங்கியிருந்தார். போதைப்பொருள் தொடர்பில் கருத்து தெரிவிப்பதாகவும் கூறப்பட்டிருந்தது. முன்னாள் ஜனாதிபதியிடம் யாரோ முறையிட்டுள்ளனர். அப்போது முன்னாள் ஜனாதிபதி ஒரு வார்த்தையேனும் கூறவில்லை. நான் அவரை பார்த்துக்கொள்வதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கூறியுள்ளார். அதற்கு சில நாட்களுக்கு பிறகு தந்தை கொலை செய்யப்பட்டார். ஜனாதிபதிக்கு அருகில் இருந்த தொழிற்சங்க பணிப்பாளர் நாயகத்தைப் போன்று உயர் பதவியில் இருந்த ஒருவர், கீழே வீழ்ந்திருந்த சந்தர்ப்பத்தில் இறுதி மூச்சு அடங்கும் வரை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள எவருக்கேனும் பலம் இருந்தால், அந்த பலம் எங்கிருந்து கிடைத்தது என்பதை முழு நாடும் இன்று அறியும். தற்போது வழக்கு விசாரணை நிறைவு பெற்றுள்ளது. குற்றவாளிகள் இதன் பின்னர் வேண்டுகோள் விடுக்கும் இயலுமை இல்லை. இங்குள்ள உண்மை தொடர்பில் நான் மீண்டும் தௌிவுபடுத்த வேண்டும். இதனை மூடி மறைத்து பேச வேண்டியதில்லை. பாதுகாப்புச் செயலாளரின் கீழ், பாதுகாப்பு கண்காணிப்பு பதவியை வகித்த துமிந்த சில்வா என்ற நபர் அச்சமின்றி தலையில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்வதற்கு உத்தரவிட்டமை இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்