இலங்கையுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கைச்சாத்திட பங்களாதேஷ் எதிர்பார்ப்பு

இலங்கையுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கைச்சாத்திட பங்களாதேஷ் எதிர்பார்ப்பு

இலங்கையுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கைச்சாத்திட பங்களாதேஷ் எதிர்பார்ப்பு

எழுத்தாளர் Bella Dalima

12 Oct, 2018 | 4:01 pm

Colombo (News 1st)  இலங்கையுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக பங்களாதேஷ் தெரிவித்துள்ளது.

சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரமவை கண்டியில் சந்தித்துக் கலந்துரையாடிய போதே பங்களாதேஷ் வர்த்தக அமைச்சர் டொபைல் அஹமட் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஒப்பந்தம் தொடர்பில் இரு நாட்டு அரசுகளும் ஆராய்ந்து வருவதாக அவர் கூறியுள்ளார்.

சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தினூடாக சிறந்த சேவைகளும் முதலீடுகளுக்கான பல சந்தர்ப்பங்களும் கிட்டும் என பங்களாதேஷ் வர்த்தக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்