புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

11 Oct, 2018 | 6:11 am

Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள்

01. உமா ஓயா திட்டத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதற்கான காரணங்கள் இருக்குமாயின், அது தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபருக்கு உயர் நீதிமன்றம் நேற்று (10) உத்தரவிட்டுள்ளது.

02. சமூக வலைத்தளங்களிலும் சில இலத்திரனியல் ஊடகங்களிலும் தமது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் முயற்சிகள் இடம்பெறுவதாக அமைச்சர் மலிக் சமரவிக்ரம பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்டார்.

03. மன்னார் மனிதப் புதைகுழியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்களின் மாதிரிகளை ஃபுளோரிடா ஆய்வுகூடத்திற்கு அனுப்புவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.

04. வட மேல் மாகாணசபையின் பதவிக்காலம் நேற்று (10) நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளது.

05. சுப்பர் டீசல் மற்றும் பெற்றோலின் விலைகள் நேற்று (10), மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சு அறிவித்துள்ளது.

06. ரஜரட்ட பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பீடாதிபதி மற்றும் மேலும் 14 பிரிவுகளின் தலைவர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.

வௌிநாட்டுச் செய்தி

01. ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதுவர் நிக்கி ஹேலி, தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

விளையாட்டுச் செய்தி

01. இலங்கை இங்கிலாந்து மற்றும் அணிகளுக்கு இடையிலான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி, மழை காரணமாக முடிவின்றி கைவிடப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்