பாணந்துரையில் 6 வாகனங்களுடன் ஒருவர் கைது

பாணந்துரையில் 6 வாகனங்களுடன் ஒருவர் கைது

பாணந்துரையில் 6 வாகனங்களுடன் ஒருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

11 Oct, 2018 | 6:32 am

Colombo (News 1st) பாணந்துரை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 6 வாகனங்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் வாகனங்களை வாடகைக்கு வாங்கி அதனை விற்பனை செய்து வந்துள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதன்போது, கைப்பற்றப்பட்ட வாகனங்களில் பெறுமதி 300 இலட்சம் ரூபா எனத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், கைது செய்யப்பட்டநபர் வௌிநாட்டில் வேலை பெற்றுத்தருவதாகத் தெரிவித்து மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் குறிப்பிட்டார்.

சந்தேகநபர் இன்று (11) பாணந்துரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்