by Staff Writer 11-10-2018 | 1:28 PM
Colombo (News 1st) சோளத்திற்கான கட்டுப்பாட்டு விலையை விவசாய அமைச்சு நிர்ணயிக்கவுள்ளது.
இதன்படி, 1 கிலோகிராம் சோளத்தின் விலை 43 ரூபாவாக அமையவுள்ளதாகவும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.
சோளத்தின் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.