சைட்டம் மாணவியை பதிவு செய்யாத மருத்துவ சபைக்கு அழைப்பாணை

சைட்டம் மாணவியை பதிவு செய்யாத மருத்துவ சபைக்கு அழைப்பாணை

சைட்டம் மாணவியை பதிவு செய்யாத மருத்துவ சபைக்கு அழைப்பாணை

எழுத்தாளர் Staff Writer

11 Oct, 2018 | 9:07 pm

Colombo (News 1st) சைட்டம் (SAITM) மருத்துவ மாணவி தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை மருத்துவ சபை நடைமுறைப்படுத்தாமைக்காக அம்மாணவி மீண்டும் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

சைட்டம் மருத்துவப் பட்டத்தைப் பெற்றுக்கொண்ட மாணவியை பதிவு செய்யுமாறு உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவு இதுவரை நடைமுறைப்படுத்தப்படாமையால், நீதிமன்றத்திற்கு களங்கம் ஏற்படுத்தப்பட்டமை தொடர்பிலான விசாரணைகளுக்காக நவம்பர்
16 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு இன்று மருத்துவ சபைக்கு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டது.

2016 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உயர்நீதிமன்றமும் உறுதிப்படுத்தியிருந்த நிலையில், தம்மை மருத்துவ சபையில் பதிவு செய்யாமை குறித்து தில்மா கசுன்தா சூரியஆரச்சி மீண்டும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்