14 வயதிற்கு குறைவானவர்களிற்கு உளவியல் தாக்கம்

உளவியல் தாக்கத்திற்கு உள்ளாகியவர்கள் 14 வயதிற்கு குறைந்தவர்கள் - உலக சுகாதார ஸ்தாபனம்

by Staff Writer 10-10-2018 | 10:09 AM
உளவியல் ரீதியிலான தாக்கங்களுக்கு உள்ளாகியுள்ளவர்களில் அரைவாசிப் பகுதியினர் 14 வயதிற்குக் குறைவானவர்கள் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. உலக மனநல ஆரோக்கிய தினம் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் பெரும்பான்மையானவர்கள் அந்த வயதில் அடையாளங் காணப்படுவதில்லை எனவும் இதனால் அவர்களுக்குரிய சிகிச்சைகள் வழங்கப்படுவதில்லை எனவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுவயதில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் 15 - 29 வயதுக்கிடைப்பட்ட காலத்தில் தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'மாறும் உலகில் இளைஞர் சமுதாயம் மற்றும் மன நல ஆரோக்கியம்' எனும் தொனிப்பொருளில் இந்த வருட மனநல ஆரோக்கிய தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.