முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது

இங்கிலாந்து - இலங்கை இடையிலான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்: முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது

by Staff Writer 10-10-2018 | 9:09 PM
Colombo (News 1st) இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி மழை காரணமாக முடிவின்றிக் கைவிடப்பட்டுள்ளது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 15 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 92 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது மழை குறுக்கிட்டது. தம்புளையில் நடைபெறும் இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அணித்தலைவர் தினேஷ் சந்திமால் களத்தடுப்பை தெரிவு செய்தார். போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து சார்பாக ஜேஸன் ரோய் மற்றும் ஜொனி பெயார்ஸ்டோ ஜோடி முதல் விக்கெட்டிற்காக 49 ஓட்டங்களைப் பகிர்ந்தது. ஜொனி பெயார்ஸ்டோ 25 ஓட்டங்களுடனும் ஜேஸன் ரோய் 24 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து அணி 51 ஓட்டங்களுக்கு இரண்டாவது விக்கெட்டை இழந்தது. அடுத்து இணைந்த ஜோ ரூட் மற்றும் அணித்தலைவர் ஒய்ன் மோர்கன் ஜோடி 41 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்த போது ஆட்டம் மழை காரணமாக தடைப்பட்டது.