வித்தியா கொலை: சுவிஸ் குமார் தப்ப இடமளித்தவருக்கு எதிரான வழக்கு விசாரிக்கப்பட்டது

வித்தியா கொலை: சுவிஸ் குமார் தப்ப இடமளித்தவருக்கு எதிரான வழக்கு விசாரிக்கப்பட்டது

வித்தியா கொலை: சுவிஸ் குமார் தப்ப இடமளித்தவருக்கு எதிரான வழக்கு விசாரிக்கப்பட்டது

எழுத்தாளர் Bella Dalima

10 Oct, 2018 | 3:26 pm

Colombo (News 1st) வித்தியா கொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ் குமாரை இரண்டு கோடி ரூபா பணத்தை இலஞ்சமாகப் பெற்று தப்பிச்செல்ல இடமளித்தமை தொடர்பில், முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் அநுருத்த லலித் ஜயசிங்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

நீதவான் ஏ.யூட்சன் முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, குற்றப்புலனாய்வுப் பிரிவினர் ‘பி’ அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து, வழக்கின் இரண்டாவது சந்தேகநபரான முன்னாள் உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் ஶ்ரீகஜன் என்பவர் கைது செய்யப்பட வேண்டுமென மன்றில் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் குறித்த வாதத்தை மறுதலித்து அநுருத்த லலித் ஜயசிங்கவிற்கு எதிராக எந்தக் குற்றச்சாட்டும் இதுவரை நிரூபிக்கப்படவில்லை எனவும், எனவே அவரை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

வழக்கு விசாரணை தொடர்பாக சட்ட மா அதிபரின் ஆலோசனை இதுவரை கிடைக்கப்பெறவில்லை என நீதவான் இதன்போது கூறினார்.

சட்ட மா அதிபரின் ஆலோசனையை விரைவாகப் பெறுமாறும் இரண்டாவது சந்தேகநபர் இல்லாதவிடத்து வழக்கை தொடர்ந்து நடத்த முடியுமா என்பது தொடர்பில் ஆலோசனையைப் பெறுமாறும் குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த வழக்கு அடுத்த வருடம் ஜனவரி 30 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்