வறுமையிலும் சாதித்த நுவரெலியா மாணவன்

வறுமையிலும் சாதித்த நுவரெலியா மாணவன்

வறுமையிலும் சாதித்த நுவரெலியா மாணவன்

எழுத்தாளர் Staff Writer

10 Oct, 2018 | 8:31 pm

Colombo (News 1st) வறுமையால் அல்லலுற்றாலும் கல்வியில் சாதிக்கத்துடிக்கும் மாணவர்களுக்கு பெருந்தோட்டப் பகுதியில் பஞ்சமில்லை.

அவ்வாறானதோர் பெருந்தோட்டக் குடியிருப்பிலிருந்து புலமைப்பரிசில் பரீட்சையில் நுவரெலியா மாவட்டத்தில் இரண்டாம் இடத்தைப்பெற்ற மாணவரே தர்வின்.

ஆனந்தன் தர்வின் ஹட்டன் ஷெனன் தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி பயில்கிறார்.

இவர் புலமைப்பரிசில் பரீட்சையில் 195 புள்ளிகளைப் பெற்று நுவரெலியா மாவட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

வறுமைக்கு மத்தியிலும் ஆனந்தன் தர்வின் இந்தப் புள்ளியைப் பெற்று பாடசாலைக்கும் அந்தப் பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

ஷெனன் தோட்டத்தில் அடிப்படை வசதிகள் குறைந்த தொடர் குடியிருப்பில் இந்த மாணவரின் வீடும் அமைந்துள்ளது.

தொழிலுக்குச் சென்ற தமது தாய் வீடு திரும்பும் வரை, தர்வினும் அவரின் சகோதரியும் காத்திருக்கும் நிலை நாளாந்தம் தொடர்கிறது.

ஹட்டன் பிரதேசத்திலுள்ள வீடொன்றில் ஆனந்தன் தர்வினின் தாய் முன்னெடுக்கும் பணிப்பெண் தொழிலே அந்தக் குடும்பத்தின் ஜீவனோபாயம்.

சுகயீனம் காரணமாக தர்வினின் தந்தை தொழில் எதிலும் ஈடுபட முடியாத துர்ப்பாக்கிய நிலை காணப்படுகிறது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்