வட மேல் மாகாணசபையின் பதவிக்காலம் நிறைவு

வட மேல் மாகாணசபையின் பதவிக்காலம் நிறைவு

வட மேல் மாகாணசபையின் பதவிக்காலம் நிறைவு

எழுத்தாளர் Staff Writer

10 Oct, 2018 | 11:46 am

Colombo (News 1st) வட மேல் மாகாணசபையின் பதவிக்காலம் இன்று (10) நள்ளிரவுடன் நிறைவடைகின்றது.

இதற்கிணங்க, குறித்த மாகாணசபையின் அதிகாரம் மாகாண ஆளுநருக்கு வழங்கப்படவுள்ளது.

இதுவரை மேலும் 4 மாகாணசபைகளின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில், அவற்றின் அதிகாரம் மாகாண ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ளது.

மத்திய மாகாணசபையின் பதவிக்காலம் நேற்று முன்தினம் நிறைவடைந்தது.

சப்ரகமுவ, வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணசபைகளின் பதவிக்காலம் கடந்த வருடம் செப்டெம்பர் மாதத்தில் நிறைவடைந்தததுடன், ஏனைய மாகாண சபைகளின் பதவிக்காலம் எதிர்வரும் 25 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.

மேலும், 3 மாகாணசபைகளின் பதவிக்காலம் அடுத்த வருடத்தில் நிறைவடையவுள்ளது.

அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி தென் மாகாண சபையினதும் 21 ஆம் திகதி மேல் மாகாணசபையினதும் பதவிக் காலங்கள் நிறைவடையவுள்ளன.

ஊவா மாகாணசபையின் பதவிக்காலம் அடுத்த வருடம் செப்டெம்பர் மாதத்தில் முடிவுக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்