ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் சிவில் உடையில் சேவையாற்றுமாறு ஆலோசனை

ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் சிவில் உடையில் சேவையாற்றுமாறு ஆலோசனை

ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் சிவில் உடையில் சேவையாற்றுமாறு ஆலோசனை

எழுத்தாளர் Staff Writer

10 Oct, 2018 | 6:57 am

Colombo (News 1st) ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகளை சிவில் உடையில் சேவையில் ஈடுபடுமாறு போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஆலோசனை வழங்கியுள்ளார்.

பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் ரயில்வே சேவையின் தரத்தை அதிகரிக்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் சிவில் ஆடையில் சேவையில் ஈடுபடும்போது, அநேகமான குற்றச்செயல்கள் அடையாளம் காணப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

30 வருடங்களுக்கும் அதிக காலமாக பல்வேறு காரணங்களினால் பதவியுயர்வுகளைப் பெறாத ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் 284 பேருக்கு, சார்ஜன்களாக பதவியுயர்வு வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தபோது, போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்