யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் விழிப்புணர்வு நடைபவனி கிளிநொச்சியை சென்றடைந்தது

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் விழிப்புணர்வு நடைபவனி கிளிநொச்சியை சென்றடைந்தது

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் விழிப்புணர்வு நடைபவனி கிளிநொச்சியை சென்றடைந்தது

எழுத்தாளர் Staff Writer

10 Oct, 2018 | 8:23 pm

Colombo (News 1st) அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுக்கும் விழிப்புணர்வு நடைபவனி இன்று கிளிநொச்சியை சென்றடைந்தது.

அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரியும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தியும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இந்த நடைபவனியை முன்னெடுத்து வருகின்றனர்.

இன்று காலை இயக்கச்சியில் ஆரம்பமான இரண்டாம் நாள் நடைபவனி ஆனையிரவு, பரந்தன் ஊடாக கிளிநொச்சியை வந்தடைந்ததும் மாணவர்கள் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை சந்தித்துக் கலந்துரையாடினர்.

யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த விழிப்புணர்வு நடைபவனி அநுராதபுரத்தை சென்றடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்